பசுமடம் திறப்பு விழா மிக அழகாக. ஆசீர்வாதங்கள் பெற்று பத்து பசுக்கள் பத்து கன்றுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .இயன்றவர்கள் குழந்தைகள் பேரன் பேத்திகளுடன் சென்று பார்த்து நேரம் செலவிட்டு மகிழ்ந்து வாருங்கள் . திரு . தேவகுமாரன் அவர்கள் சென்னையில் மிகுந்த வேலைகள் கொண்டவர் . மாடுகளைப் பராமரிக்க வைத்திருந்த ஒருவர் இயலாமையினால் சென்று விட்டார் . இரண்டு பேர் மட்டுமே பார்த்துக் கொள்வது கடினம் என்று அடுத்த தகுதியான ஆள் கிடைக்கும் வரை அவரே அங்கு இருந்து பசு கன்றுகளை பார்த்துக் கொண்டு அடுத்த ஆளை ஏற்பாடு செய்து விட்டு வந்தார் . அவரது அன்பான ஈடுபாடு மெச்சத்தக்கது . வாழ்க . விழாவினை பதிவிட்டிருக்கும் ஆச்சி வந்தாச்சு ஆசிரியர் பழனியப்பண்ணன் அவர்கட்கு மனமார்ந்த நன்றியும் அன்பும் .



